நன்றாக உழைக்கும், பிடித்து லாக் செய்து விட்டால் காலத்திற்கும் அப்படியே இருக்கும் என்று நினைத்து மொத்த தோட்டத்திலும் கட்ட வேண்டிய இடத்தில் எல்லாம் Tag வைத்து கட்டி விட்டது பெரிய தவறாக போய்விட்டது. வெயிலில் எல்லா Tag-ம் இத்து போய், ஆறு மாதத்தில் எல்லாமே தானாகவே பிரிந்து போய் விட்டது. வலை எல்லாம் அந்தரத்தில் கட்டாமலேயே விட்டது மாதிரி ஆகி, கம்பியில் உராய்ந்து கிழிய ஆரம்பித்தது.
இன்னொன்றையும் செய்திருக்கலாம். உராய்வினால் கிழிந்து விடக்கூடாது என்று தான் உருளை கம்பிகளாய் அமைத்தோம். அந்த கம்பிகளை சுற்றி ஒரு சுற்று நிழல் வலையில் மிச்சமாய் கிடந்ததை சுற்றி கட்டி அதன் மேல் வலையை அமைத்திருந்தால், உராய்வு இருந்தாலும் சேதம் இருந்திருக்காது.
கிட்டத்தட்ட எல்லா Tag-ம் வாயை பிளக்க, நிழல் வலைக்கு கட்ட என்று கிடைக்கும் பச்சை நிற கயறு வாங்கி எல்லா இடத்திலும் கட்டி சரி செய்தேன். எல்லா இடத்திலும் பெரிய ட்ரே வைத்து விட்டதால் ஏணி வைத்து ஏற இடம் இல்லை. முடிந்த அளவுக்கு இருக்கும் இடைவெளியில் ஏணியை வைத்து இப்போது வலை எந்த காற்று வந்தாலும் அசைவது இல்லை.
எல்லாவற்றையும் ஆரம்பிக்க வேண்டும். தரை தோட்டத்தில் இந்த முறை புதிதாய் ஒரு கத்தரி ஓன்று சேர்ந்திருக்கிறது