Backlinks எப்படி உருவாக்குவது? எங்கு உருவாக்குவது?
கெஸ்ட் போஸ்ட் (GUEST POST):
உங்களுடைய பிளாக்கைப் பற்றி அடுத்தவர்களுடைய blog ல் சென்று எழுதுவதற்கு பெயர்தான் கெஸ்ட் போஸ்ட் என கூறுகிறோம்.
நீங்கள் உங்கள் பிளாக் சம்பந்தமாக எழுதும்போது அதனுடன் சேர்த்து உங்களுடைய பிளாக் லிங்கை அந்த கெஸ்ட் போஸ்ட் இல் கொடுக்க வேண்டும்.
அப்படிக் கொடுக்கும்போது அந்த பிளாக்கிற்கு சென்று படிப்பவர்கள் நீங்கள் எழுதிய உங்களுடைய ப்ளாக் பற்றியும் படிப்பார்கள்.
அத்துடன் அந்த லிங்கை கிளிக் செய்து உங்களுடைய பிளாகிற்க்கு வருவார்கள்.
இதனால் உங்களுக்கு Backlinks கிடைக்கும்.
ஒரு விஷயத்தை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் எழுதிய கெஸ்ட் போஸ்ட் அந்த பிளாக்கிற்கு வரும் பார்வையாளர்களை கவர வேண்டும், ஆக, மிக நன்றாக எழுதுங்கள், அப்போதுதான் உங்களுடைய பிளாக் இருக்கு அதிக பார்வையாளர்களை ஈர்க்க முடியும்.
Forum ல் இணையுங்கள்:
Yahoo answers அல்லது கோரா (QUORA) போன்ற வலைதளத்திற்கு சென்று உங்களுடைய blog post பற்றிய அங்கு எழுதுங்கள். ஏனென்றால் அங்கு மக்கள் பலவகையான கேள்விகளை எழுப்புவார்கள், அதை நிறைய பேர் படிப்பார்கள். அப்போது நீங்கள் சொல்லும் கருத்தை அவர்கள் பார்ப்பார்கள், படிப்பார்கள் பின்பு அப்படியே உங்கள் வலைதளத்திற்கு வருவார்கள்.
சமூகவலைதளங்களில் உங்களுடைய பிளாக் லிங்கை பகிருங்கள்:
நம் அனைவருக்கும் தெரியும் சமூக வலைத்தளம் ஒரு மிகப்பெரிய கடல் போன்றது. அங்கு லட்சக்கணக்கான மக்கள்கள் வந்து கொண்டும், போய்கொண்டும், படித்துக் கொண்டும் இருப்பார்கள்.
Backlinks உருவாக்குவதற்கு இதைவிட தரமான நல்ல இடம் கிடைக்காது. எனவே நீங்கள் எழுதிய பிளாக் post சமூக வலைத்தளங்களில் பரப்புங்கள், இதனால் பார்வையாளர்களையும் உங்கள் வலைதளத்திற்கு வர வைக்க முடியும்.
அடுத்தவர்களுடைய பிளாகில் கமெண்ட் எழுதுங்கள்:
நீங்கள் எப்போதெல்லாம் அடுத்தவர்களுடைய பிளாக்கிற்கு சென்று உங்களுக்கு தேவையான கருத்துக்கள் பற்றி படிக்கிறீர்களோ, படித்ததோடு நின்றுவிடாமல் அவர்களுடைய கமெண்ட் பாக்ஸில் உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள்.
அதோடு உங்களுடைய வலைதளத்தின் உடைய பெயரையும் அதில் குறிப்பிடுங்கள். நிறைய பார்வையாளர்கள் அந்த கமெண்ட்டை படிக்கும் போது உங்களுடைய கமெண்ட்டையும் படிப்பார்கள், அப்போது நீங்கள் கொடுத்த உங்களுடைய பிளாக் லிங்கை கிளிக் செய்து உங்களுடைய வலைத்தளத்திற்கும் வருவார்கள்.
இதுவும் backlink தான்.
இந்த post உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றேன். பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள், உங்களுடைய கருத்துக்களையும், சந்தேகங்களையும் கமெண்ட்டில் தெரிவியுங்கள்.