மொத்தம் பத்து விதையில் எட்டு போல முளைத்திருக்கும். அதில் ஒரு மூன்று செடியை மாடியில் பையில் வைத்துவிட்டு, சிலவற்றை தரையில் வைத்து விட்டேன். தரையில் வைத்த செடிகள் சுமாராகவே காய்த்தது. ஆனால் மாடியில் வைத்த செடி காய்த்து கொட்டிவிட்டது. பறித்ததில் நிறைய காயபோட்டு வற்றலுக்கே பயன்படுத்தும் அளவுக்கு மூன்று செடிகளிலும் விளைச்சல்.
மிளகாயை பார்க்கவே அழகு. இதை சிலர் ‘வானம்பாடி மிளகாய்’ ‘வானம் பார்த்த மிளகாய்’ என்றார்கள். மற்ற மிளகாய் எல்லாம் தரை பார்த்து கொண்டிருக்க, இந்த மிளகாய் வானம் நோக்கி வளர்கிறது. வெளிர் பச்சை நிறத்தில் ஆரம்பித்து ஆரஞ்சு நிறம் மாறி கடைசியில் சிவப்பு நிறத்தில் மாறுகிறது. எல்லா நிறத்திலும் செடியில் மிளகாய் பார்க்க கிட்டத்தட்ட Ornamental Chilli மாதிரி இருக்கிறது. தோட்டத்தில் வரிசையாய் வைத்து விட்டால் ஒரு அலங்கார செடி போல ஆகிவிடும் போல.
காரம் பட்டையை கிளப்புகிறது (அதான் Hot Pepper என்று பெயர் வைத்திருக்கிறார்கள்). இந்த தை பட்டத்திற்கும் ஒரு பாக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன்.
முகவரியையும் கேட்டு பதிவு செய்து கொண்டார்கள். முன் பணம் ஏதும் செலுத்த தேவை இல்லை. எப்போது கொடுப்பார்கள், எப்படி கொடுப்பார்கள்