read.cash Log in
@KingTamil

Siru ponmani asaikindra Tamil

லாசர் ‘குட்டீ எனக்க குட்டீ!” என்று கதறி அழத்தொடங்கினான். ஜான்சன் பயந்துவிட்டான். “ஏல ஏல” என அவனை உசுப்பினான். மேரியக்கா ஓடிவந்தாள். அவன் அப்படியே படுத்துவிட்டான். மேரியக்கா அவனருகே அமர்ந்திருந்தாள். அவன் கொஞ்சம் தூங்கியிருப்பான். அவனை யாரோ தூக்கிக் கொண்டுசென்றார்கள். “நில்லுலே….ஏலே நில்லுலே” அவன் நிற்கமுடியாமல் குழைந்தான். “மண்ணைப்போடு… மண்ணைப்போடு” குழிக்குள் ஒரு சிறிய பெட்டி. அவன் கையைக்கொண்டு எவரோ மண்ணை அள்ளிப்போட்டார்கள். அவன் விசும்பிக்கொண்டே இருந்தான். அவனுக்கு அன்றே காய்ச்சல் கண்டது. அவன் பாயில் புரண்டபடி “குட்டி குட்டி” என்று புலம்பிக்கொண்டிருந்தான். “குட்டி வண்டாக்கும்… எனக்க குட்டி வண்டாக்கும்” என்றான்.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.