Sirukathaikal Moondru Tamil 10
ஆமா, பாம்பு கடிச்சுப்போட்டுன்னு அம்மா சொன்னாவ” என்றான் ஜான்சன். “நான்கூட நமக்க விச வண்டுதான் கடிச்சுப்போட்டோன்னு நினைச்சேன்” லாசர் . ‘நான் அதை கொண்ட்டுப்போயி வைக்குறப்பவே குட்டிய பாம்பு கடிச்சுப்போட்டுது” என்றான் லாசர். “நல்ல குட்டி. வளந்த பிறவு அவளை நான் கெட்டணும்னு நினைச்சேன்” என்று ஜான்சன் சொன்னான். லாசரின் கையிலிருந்த கருப்பட்டியை இயல்பாக வாங்கி தன் வாய்க்குள் போட்டுக்கொண்டு ஜான்சன் “நீ விச வண்டை பாத்தியா? அது இலை திங்குதா?” என்றான்.இல்லை, என்னைய இங்க கூட்டிட்டு வந்திட்டாவ” என்றான் லாசர். “ஆமா, சாவுஜெபத்தை பிள்ளைக கேக்கப்பிடாது” என்று ஜான்சன் சொன்னான். “அடக்கம் சாயங்காலம் உண்டுண்ணாக்கும் சொன்னாவ” லாசர் ரகசியமாக “அடக்கம்ணாக்க?”என்றான். “மண்ணிலே புதைச்சு வைக்கிறது” என்றான் ஜான்சன். அவனும் ரகசியமாகத்தான் சொன்னான்.
1 comment
அவளுடைய கூந்தல் நீளமாக பளபளப்பாக இருந்தது. அவன் அம்மாவின் கூந்தல் நார்போலிருக்கும்