Sithada kattikitu singaram Tamil 5
நீ போ…நான் வரமாட்டேன்” என்றான் ஜான்சன். “நான் போறேன்” என்று லாசர் சொன்னான். “நீ என் பேரச் சொன்னா நான் உன்னை கல்லால அடிப்பேன்” என்றான் ஜான்சன். “சொல்லமாட்டேன்” என்று லாசர் சொன்னான் அவன் பெரியசாமியாரின் வீட்டை அடைந்தான். பெரியசாமியாரின் மனைவி வெளியே போர்வைகளை காயப்போட்டுக்கொண்டிருந்தாள். வேலைக்காரப்பெண் உதவி செய்தாள். அவளிடம் சென்று பெரிய சாமியாரைச் சந்திக்கவேண்டும் என்று கேட்கலாமா? வேண்டாம். நேராக அவரிடமே சென்றுவிடலாம் அவன் வீட்டைச் சுற்றிக்கொண்டு சென்றான். அவர்களின் கூரைவீடுகளை விட பலமடங்கு உயரமான வீடு. பெரிய வெள்ளைச் சுவர்கள். அவர்களின் வீடும் திருக்கோயில் போலவே இருந்தது. அவன் பெரிய சாமியாரின் அறையை கண்டான். அவர் ஒரு மேஜைமுன் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.
1 comment
அவளிடம் சென்று பெரிய சாமியாரைச் சந்திக்கவேண்டும் என்று கேட்கலாமா? வேண்டாம். நேராக அவரிடமே சென்றுவிடலாம்