read.cash Log in
@KingTamil

Sithada kattikitu singaram Tamil 3

லாசர் “ஆமா” என்றான். பிறகு “என்னலே செய்ய?” என்றான். “கொண்டுபோயி யோசேப்பு அண்ணன் கிட்டக் குடுப்பம்” என்றான் ஜான்சன். “அவரு என்னைய அடிப்பாரு” என்று லாசர் சொன்னான். “ஆமா அடிப்பாரு. நீதானே எடுத்து வச்சே? உனக்க வீட்டிலேதானே இருந்தது? செத்துப்போச்சுல்லா?” லாசர் அதை மீண்டும் பார்த்தான். அவனுக்கு இரக்கம்தான் வந்தது. நல்ல வண்டு. அதன் நீலக்கண்களில் ஒளி இருந்தது. “நாம இதை பெரியசாமியாரு கிட்ட குடுப்பம்… அவரு அடிக்க மாட்டாரு” என்றான் லாசர். “பெரியசாமியாரு கிட்டயா? அய்யோ….நீ போ. நான் வரமாட்டேன்” என்றான் ஜான்சன். லாசர் “நான் போறேன்” என்றபடி கலத்துடன் நடந்தான். “அய்யோ லே. அவரு அடிப்பாருலே… பிரம்பு வச்சிருக்காருலே” என்றான் ஜான்சன். “அடிச்சா சாவுதேன்… நான் எடுத்து வச்சுத்தானே வண்டு செத்துப்போச்சு?” என்றான் லாசர்.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.