read.cash Log in
@KingTamil

Sirukathaikal Moondru Tamil 8

அக்கா நீ பளபளப்பா இருக்கே” என்று அவன் சொன்னான். அவள் புன்னகைத்தாள். அவள் கண்கள் எருமைகளின் கண்கள் போல விரிந்து நீர் மின்னின. அவளுடைய கூந்தல் நீளமாக பளபளப்பாக இருந்தது. அவன் அம்மாவின் கூந்தல் நார்போலிருக்கும். உச்சியில் சும்மாடு வைக்கும் இடம் முடியில்லாமல் காய்ந்த புல் போலிருக்கும் அவன் மேரியக்கா கொடுத்த கருப்பட்டியுடன் வந்து மீண்டும் திண்ணையில் நின்றான். ஜான்சன் அவனை நோக்கி வந்தான். அவன் வந்த நடையிலேயே ரகசியம் இருந்தது. அவனிடம் சொல்ல தனக்கு மேலுமொரு செய்தி இருப்பது லாசருக்கு பரபரப்பை அளித்தது. “ஏலே எனக்க குட்டி செத்துப்போச்சு” என்றான்.

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.