read.cash Log in
@KingTamil

Siru ponmani asaikindra Tamil 4

அவன் அவர் பெயரை பலமுறை சொல்லிப் பார்த்ததுண்டு. அவன் நாவில் அவர் பெயர் வருவதில்லை. சாமுவேல் மாதிரி. வறுவேல் மாதிரி ஒரு விசித்திரமான பெயர். ஆனால் ஜான்சன் தெளிவாகவே சொல்லிவிடுவான். ராபர்ட் கால்டுவெல். அவனால் சொல்லமுடியாத ஒன்றும் இல்லை. ஜான்சன் எல்லாவற்றையும் எப்படியோ அறிந்திருந்தான். பெரிய சாமியார் கைகாட்ட மரியான் எழுந்து பைபிளை வாசித்தார். அவன் குரல் உரக்க ஒலித்தது. திருக்கோயிலில் பைபிள் வாசிக்கும்போது அது அங்கிருக்கும் எவரிடமும் உரையாடுவதுபோல் இருப்பதில்லை. வேறெங்கோ இருக்கும் எவரோ ஒருவரிடம் தனியாகப் பேசுவதுபோல ஒலிக்கிறது.

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.