read.cash Log in
@KingTamil

Sithada kattikitu singaram Tamil 7

அவன் அழுதபடி “செத்துப்போச்சு சாமி…நான் ஒண்ணுமே செய்யல்ல. செத்துப்போச்சு சாமி” என்றான் அவர் பானைக்குள் இருந்து அந்த வண்டை வெளியே எடுத்தார். அவருடைய விரல்களுக்கு நடுவே அதன் வால் தொங்கியது. அவர் அதை குலுக்கிப் பார்த்தார். “நான் பானையிலே வச்சேன்…பானையிலே செத்துப்போச்சு சாமி” என்றான் லாசர். பழுப்புநிற பற்கள் தெரிய “எனக்க மக்கா, செத்ததெல்லாம் என் தேவன் கைபட்டால் எழும்பாதோ?” என்றார் பெரிய சாமியார். “பாரு… இதையும் தேவன் எழுப்புவார்” அவர் அதை கையில் வைத்து விரல்களால் வருடினார். அவர் ஜெபம் சொல்கிறார் என லாசர் நினைத்தான். அவர் அதைக் கொண்டுசென்று மேஜைமேலிருந்த சிலுவைப்பாடுச் சிலையின் கீழே வைத்தார். மரத்தில் செதுக்கப்பட்ட சிலை. ஏசுவானவர் முள்முடிசூடி கைவிரித்து வானை நோக்கிக்கொண்டு தொங்கினார்.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.