Siru ponmani asaikindra Tamil 2
அவனுக்கு வாயில் கசப்பான மருந்தை ஊற்றி குடிக்க வைத்தார்கள். மேரியக்கா அவனை எழுப்பி அமரச்செய்து சூடான கஞ்சியை அவனுக்கு கொடுத்தாள். அவன் கண்ணீருடன் “குட்டி, எனக்க குட்டி… அவளுக்கு பல்லு இருக்கு” என்று சொன்னான் திருக்கோயிலில் ஜெபம் நடந்தபோது மேரியக்கா அவனை துணியால் மூடி கூட்டிக்கொண்டு சென்றாள். அவனுக்கு காக்கிச் சட்டையும் காக்கி கால்சட்டையும் அவள்தான் அணிவித்தாள். “உனக்க குட்டிக்க ஜெபமாக்கும். ஒரு வார்த்தையானாலும் நீ கேக்கணும்லே” என்றாள் அவனால் பெஞ்சில் அமர முடியவில்லை. அம்மாவை எசிலி கிழவியும் அத்தையும் இருபக்கமும் நின்று தூக்குவதுபோலகொண்டுவந்தார்கள். அம்மா முக்காட்டால் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அப்பா ஆண்கள் பகுதியில் இறுக்கமாக கைகளை நெஞ்சோடு கட்டியபடி அமர்ந்திருந்தார்
1 comment
அவர் அதைக் கொண்டுசென்று மேஜைமேலிருந்த சிலுவைப்பாடுச் சிலையின் கீழே வைத்தார்