திதி உணவு முறை அதற்கு அடுத்த நாள் ஏகாதசி அன்று, எந்த உணவும் சாப்பிடாமல் இருந்தால் விரததினமாகும். அதற்கு அடுத்த தினம் இதே போல படிப்படியாக உணவு லையை மாற்றவும்.இதை கீழே உள்ள அட்டவணை விளக்கும்.,
இந்த உணவு முறையை கடைபிடிக்கும் சமயம் அந்த நாளில் திதி ஆரம்பிக்கும் நேரத்தை சரிபார்த்து ஆரம்பிக்கவும். ஒருநாளின் பிற்பகுதியில் கூட திதி ஆரம்பிக்கலாம். பஞ்சாங்க உதவியுடன் இதை பின்பற்றவும். இந்த விரத முறை மிகவும் படிபடியாக மற்றும் விஞ்ஞான ரீதியில் அனுகும் முறையாகும்
அஷ்டமி எளிய உணவு ( பருப்பு மற்றும் நெய் கலந்த காரமற்ற உணவு)
நவமி சமைக்கப்படாத பழம் மற்றும் காய்கறிகள்
தசமி பழரசங்கள், எலுமிச்சை ரசம்
ஏகாதசி கோவில் சென்று துளசி தீர்த்தம் அருந்தி விரதம் துவங்கவும்
துவாதசி பழரசங்கள், எலுமிச்சை ரசம்
திரயோதசி சமைக்கப்படாத பழம் மற்றும் காய்கறிகள்
சதுர்தசி எளிய உணவு ( பருப்பு மற்றும் நெய் கலந்த காரமற்ற உணவு)