read.cash Log in
@ChemRaj

Nalayira thivya pirabantham odi pogalama 6

அவன்: கைல வளையல பாருடா நண்பன்: டேய், உனக்கு நேரம் செரியில்ல...காலங்காத்தால வெறுப்பு ஏத்தாத .... அவன்: சரி, சரி...அந்த கும்பல்ல அழகா சிரிசிகிட்டு வர்றா பாரு, அவ தான் என் ஆளு நண்பன்: சரிதான், முத்தி போச்சு காதல் கிறுக்கு, ஐயா சாமி என்னைய விடு...இதுக்கு மேல இருந்தா, என் மண்டை காஞ்சிரும் இப்படி, ஒரு பொத்தாம் பொதுவாய் அடையாளம் காட்டும் காதலனை ஐங்குறு நூறில் காட்டுகிறார் அம்மூவனார் அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய், அரம்போழ் அவ்வளைக் குறுமகள் நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளேஅலங்கு இதழ் = அசைகின்ற இதழ் நெய்தல் = நெய்தல் மலர்கள் நிறைந்த கொற்கை முன் துறை = கொற்கை கடற் கரையில் இலங்கு முத்து = ஒளி பொருந்திய முத்துக்கள்

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.