read.cash Log in
@KingTamil

Karu Kurunaval Tamil Part 15

செல்லும்போது அவர்களை ஊக்கிய அனைத்தும் வடிந்துவிட்டிருந்தன. உள்ளம் சோர்வை பெருக்கிக்கொண்டது. சோர்வு தளர்வை, தளர்வு துயிலை உருவாக்கியது. அவர்களுக்குமேல் பனிப்பொழிவு வெண்ணிற துகள்களாக விழுந்துகொண்டிருந்தது. குதிரைக்குளம்படிகளை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். செப்டெம்பர் 17 ஆம் தேதி அவர்களின் பயணக்குழுவை பனிவெளிக் கொள்ளையர் தாக்கினார்கள். அரைத்தூக்கத்தில் குதிரைமேல் அமர்ந்திருந்த சூசன்னா சுற்றிலும் எழுந்த கலைந்த ஓசைகளை கேட்டு கண்விழித்தாள். என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அவளுடன் வந்துகொண்டிருந்த காவலர்களில் ஒருவன் வானை நோக்கி வேட்டு போட்டான். அந்த ஓசையை மலைகள் முழக்கமிட்டன. புகை காற்றில் வெண்ணிறத் துணிச்சுருள் போல அசைவில்லாமல் நின்றது

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.