Sirukathaikal Moondru Tamil Part 5
லாசருக்கு என்ன லாபம் என்று புரியவில்லை. “லாபம்”என்று மட்டும் சொன்னான். ஜான்சன் “நாம இத விக்கலாம்” என்று சொன்னன். சொன்னதுமே அவனுக்கு உற்சாகம் மிகுந்தது. “அளகாட்டு இருக்குல்லா? நாம வித்தா பைசா குடுப்பானுக. பத்துபைசாக்கு ஒண்ணு…” லாசர் குழப்பமாக “பத்து பைசாவுக்கு ஒண்ணு” என்றான். “நெறைய குட்டிபோடும்…நாம தினம் ஒண்ணுண்ணு விக்கலாம்… டீக்கனாருக்க மவன் சிலுவைக்கு மட்டும் குடுக்கப்பிடாது” என்றான் ஜான்சன். லாசர் “பாவம்”என்றான். “அவன் கெட்டவன்லே…அவன் போட்டிருக்குத சட்டைய பாத்தியா? சில்காக்கும். கப்பல்துணி….அந்த கப்பல்துணியை போட்டிருக்கப்பாட்ட எல்லாரும் கெட்டவனுக” என்றான் ஜான்சன். லாசர் “ஆனா பெரிய சாமியாரு கப்பல்துணில்லா போட்டிருக்காரு?” என்றான்
No comments yet