read.cash Log in
@KingTamil

Karu Kurunaval Tamil Part 10

நில், சூசி, நில்!” என்று கூவியபடி பெட்ரூஸ் அவளுக்குப் பின்னால் குதிரையில் வந்தார். குதிரை அந்த மலைப்பிளவை அடைந்து அப்பால் சென்று மேலும் ஏறி ஒரு பாறையை அடைந்து நின்றுவிட்டது. மெய்யாகவே அதற்கப்பால் ஆழமான மலைப்பள்ளம். அவள் அதன்மேல் அமர்ந்தபடி மூச்சிரைத்தாள். ஏதோ கெட்ட கனவு முடிந்ததுபோல் தோன்றியது. ஆனால் மிக ஆழத்தில் மலையின் மடிப்பில் ஒரு சிறு கூட்டத்தை அவள் பார்த்தாள். திபெத்திய படைவீரர்கள். அவர்கள் அவளை பார்த்துவிட்டனர். அவர்கள் வானை நோக்கிச் சுட்டனர். மலையில் டப் டப் டப் டப் என அந்த ஓசை எதிரொலித்துக் கொண்டே இருந்தது. ஒரு சிறிய வெண்ணிற லில்லி போல அங்கே அந்த வேட்டின் புகை தெரிந்தது.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.