Karu Kurunaval Tamil Part 12
ஆனால் அப்போது அவள் மிகவும் களைத்திருந்தாள். அரைத்தூக்கத்தில் இருந்தாள். அவளால் அவனை வெறுமே வெறித்துப் பார்க்கத்தான் முடிந்தது. அவன் புன்னகைத்துக் கொண்டே கடந்துசென்றான். நாக்சு நகரின் ஆட்சியாளர் அவர்கள் லாசா செல்லக்கூடாது என்று ஆணையிட்டார். அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். ஆட்சியாளரின் மாளிகையிலேயே ஒரு சிறிய அறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். மென்மயிர் கம்பிளித்தரையும், யாக்கின் தோலால் ஆன சுவர்களும் கொண்ட அந்த வெம்மையான அறை விண்ணுலகில் இருப்பதுபோல அவர்களுக்கு தோன்றியது. உலர்ந்த இறைச்சி போடப்பட்ட மக்காச்சோளக் கஞ்சியை குடித்து, தொடர்ச்சியாக இரண்டுநாட்கள் தூங்கி விழித்த பின்னர் அவர்கள் முழுமையாக மீண்டுவந்தனர்.
No comments yet