read.cash Log in
@KingTamil

Karu Kurunaval Tamil Part 9

பெட்ரூஸ் ஒன்றும் சொல்லவில்லை. அவளை தூக்கி குதிரையில் ஏற்றினார். அவரும் ஏறிக்கொண்டார். ஆனால் அந்த மலைப்பிளவை அடைந்ததும் அவர் நேராகச் சென்றார். சூசன்னா கூச்சலிட்டாள். “பேட் என்ன செய்கிறீர்கள்? இதுதான் வழி… இதுதான்…” அவர் “நீ மனம் குழம்பிவிட்டாய்… பிரமைகள் வரத்தொடங்கிவிட்டன… அது மலையுச்சியின் விளிம்பு. அந்தப்பக்கம் நீயே பார், மேகம் நின்றிருக்கிறது.” “பேட் அதுதான் வழி… அதுதான். எனக்கு தெரியும். அந்தப் பையன் காட்டிய வழி அதுதான்.” “பேசாமல் வா” என்று பெட்ரூஸ் அதட்டினார். சூசன்னா சட்டென்று குதிரையை தட்டிச் செலுத்தி விசைகூட்டி அந்த மலைப்பிளவு நோக்கிச் சென்றாள். குளம்படி ஓசை எழுந்தது. மணலும் கூழாங்கற்களும் தெறித்தன.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.