read.cash Log in
@KingTamil

Karu Kurunaval Tamil Part 18

அவர்கள் அலறியபடி விலக அந்த இடைவெளி வழியாக சூசன்னாவும் பெட்ரூஸும் குதிரைகளை செலுத்தி ஊடுருவிக்கடந்து முன்னால் சென்றனர். பின்பக்கம் அவர்கள் அந்த வணிகக்குழுவினரை கொன்று பொருட்களைச் சூறையாடும் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்தன நெடுந்தொலைவு சென்றபின்னரே அவர்கள் மீளமுடிந்தது. சூசன்னா அழுதுகொண்டிருந்தாள். பெட்ரூஸ் “நல்லவேளை நாம் தப்பினோம்” என்றார். அவர்களுக்கு மேலே செல்ல வழி தெரியவில்லை. அந்தப்பாதையில் முன்னேறிச் செல்வது தவிர வேறு வழியே இல்லை. அவர்களிடம் இருந்த உணவு பத்து நாட்களுக்கு போதுமானது. வேண்டுமென்றால் மேலும் இரண்டுநாட்கள் கூட்டமுடியும். அதற்குள் அவர்கள் எவரையாவது சந்தித்தாக வேண்டும். ஆனால் வழிகாட்டிகள் இல்லை, வழியின் வரைபடங்கள் இல்லை, அந்த நிலம் பற்றிய எந்த செய்தியும் இல்லை.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.