read.cash Log in
@KingTamil

Moodru Dinosar kalangal Tamil 3

என்னவாக்கும்?” என்றபடி ஜான்சன் அருகே அமர்ந்தான். “பைசாவா? பைசாவாலே?” அவன் குரல் தழைந்தது. “பைசான்னா ஆருகிட்டையும் சொல்லாண்டாம். நாம ரெண்டுபேரும் எடுத்துக்கிடுவோம்… திருச்செந்தூருக்கு போவோம்…அங்க கடல் உண்டு கேட்டியா?” லாஸர் மேலும் திகைப்புடன் பார்த்தான். திருச்செந்தூர் திருச்செந்தூர் என்று அவன் உள்ளே சொல் தத்தளித்தது. “இல்லேண்ணா தூத்துக்குடி… அங்க பெரிய கடல் உண்டு… அதுக்குமேலே கப்பல் உண்டுலே. பெரிய கப்பல்… இந்தா இந்த வீட்ட காட்டிலும் பெரிசாட்டிருக்கும். அதிலே ஏறினா பெனாங்கு கொளும்பு போவலாம் தெரியுமா?” லாஸர் பெருமூச்சுவிட்டான். ஜான்சனுக்குத் தெரியாத செய்திகளே உலகில் இல்லை. அவன் அழத்தொடங்கினான். ஏன் அழுகிறான் என்றே அவனுக்குத்தெரியவில்லை.

50¢

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.