Sirukathaikal Moondru Tamil 12
அவளுக்கு மேல்வாயில் ஒரே பல்தான். தவழ்ந்து தவழ்ந்து அவள் தொடைகளெல்லாம் கருமையாக இருக்கும். “ன்னா ன்னா” என்று அவளே நெஞ்சில் எச்சில் ஒழுக சொல்லிக் கொண்டிருப்பாள். கழுத்தில் தொங்கிய சிலுவைக்கயிற்றை பிடித்து தூக்கி சிலுவையை வாயில் வைத்து கடிப்பாள். அவனைக் கண்டதும் கண்களில் சிர்ப்புடன் “ன்னா ன்னா ன்னா” என்பாள். லாசருக்கு அழுகை வந்தது. “ஏம்லே?” என்று ஜான்சன் கேட்டான். “குட்டி நல்லவளாக்கும்லே… அருமையாட்டு என்னைய அண்ணாண்ணு விளிப்பா” அவன் தேம்பி அழத்தொடங்கினான். ஜான்சன் “அவளை ஜீவிக்கவைக்கணுமானா பெரிய சாமியாரு நினைக்கணும்” என்றான். லாசர் நிமிர்ந்து பார்த்தான். “ஏசு சாமி மூணாம்நாள் வந்தாருல்லா?” என்றான் ஜான்சன்.
No comments yet