read.cash Log in
@KingTamil

Karu Kurunaval Tamil Part 3

ஆமாம், இதுதான் என் கடைசி எல்லை… இனி நான் அமைதியாக என் தேவனிடம் என்னை அளிக்க நினைக்கிறேன்.” பெட்ரூஸ் என்ன செய்வது என்று அறியாமல் அவள் அருகே அமர்ந்திருந்தார். அவருக்குள் துயரமும் எரிச்சலும் நிறைந்திருந்தது. சூசன்னா ”நீங்கள் என்னை விட்டுவிட்டுச் செல்லலாம் எனக்கு அதில் வருத்தமில்லை என்று புன்னகையுடன் சொன்னாள். “அதெப்படி போகமுடியும்?” என்றார் பெட்ரூஸ். “இந்த வெறுமையின் வெளியில் பொய்யும் உண்மையும் ஒன்றுதான்” என்று சூசன்னா சொன்னாள். “நான் அறிவேன், உங்களுக்கு நான் ஒரு பொருட்டே அல்ல.”பெட்ரூஸ் அதை மறுக்கவில்லை. “உங்களுக்கு எந்த மனிதரும் ஒரு பொருட்டல்ல. மெய்யான தேவனே கூட பொருட்டல்ல” என்று மீண்டும் சூசன்னா சொன்னாள். அப்படிச் சொல்லும்போது வலுவான ஒரு மறுப்பை எதிர்பார்ப்பது மனித வழக்கம், ஆனால் அவள் அப்படி எதிர்பார்க்கவில்லை.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.