Siru ponmani asaikindra Tamil 9
எசிலி கிழவி ஓயாமல் பேசிக்கொண்டிருந்தாள். “படுத்தா எந்திரிக்கோம். செத்தா உயிர்த்தெழுதோம்… நினைச்சு நினைச்சு அளுதா ஆச்சா? நான் சொல்லுத ஆரு கேக்கா? போடீ கிளவீங்குதாக” ஆனால் அவளுடைய குரல்தான் அந்த வீட்டை உயிருடன் வைத்திருந்தது. லாசர் சிறுநீர் கழிக்க எழுந்தான். கால்கள் தடுமாறின. சுவரைப் பிடித்தபடி நடந்து வெளியே சென்றான். அவனை கண்டதும் விடலிப்பனைக்கு அப்பாலிருந்து ஜான்சன் சீழ்க்கை அடித்தான். அவன் திரும்பிப் பார்த்தான். அவனருகே வந்த ஜான்சன் “ஏல, அந்த வண்டு என்னாச்சுலே? குட்டி போட்டுதா? பாத்தியா?” என்றான். லாசர் அதை மறந்தே போயிருந்தான். “இல்லே, பாக்கல்லே” என்றான். “எங்க வச்சே?” என்றான் ஜான்சன். “அந்த வண்டு ஆருக்கதுன்னு நான் கண்டுபிடிச்சாச்சு. அது பெரிய சாமியாரு வளக்குத வண்டாக்கும்” “அவரு வளக்குததா? ஆரு சொன்னா?” என்று லாசர் கேட்டான்.
2 comments
Hey! I dont know tamil language!so I couldnot read this...hoping some new articles that can be read worldwide.. Yet you are doing great job man...keep it up...keep providing us some good articles..and best of luck to you.