read.cash Log in
@KingTamil

Karu Kurunaval Tamil Part 5

நான் அதை கட்டாமல் வந்துவிட்டேன்… இரு” என்று அவர் அதன்பின் சென்றார். அவர் வருவதைக் கண்டதும் அது விரைந்து நடக்கத் தொடங்கியது. சூசன்னா கண்களை மூடிக்கொண்டு மூச்சிரைத்தபடி பாறையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். பனியின் குளிர் உடலில் காய்ச்சலாக வெளிப்பட்டது. அந்த வெப்பத்தில் நெற்றியும் கண்களும் கொதித்தன. அவள் கண்களை திறந்தபோது நீர்ப்பிம்பம்போல அலைபாய்ந்த காட்சியில் ஒருவன் மலைச்சரிவில் இறங்கி வருவதைப் பார்த்தாள். “யார்? அது யார்?”என்றாள். அவள் அருகே எவரும் இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தாள். அவன் மிகமெல்ல மலைச்சரிவில் இறங்கி வளைந்து அவளை நோக்கி வந்தான்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.