Karu Kurunaval Tamil Part 11
பெட்ரூஸ் “நல்லவேளை” என்றார். “நான் சொன்னேனே, அவன் வழிகாட்டியிருக்கிறான்” என்றாள். “அவனுக்கு அவர்கள் அங்கே இந்நேரம் செல்வார்கள் என்று எப்படித் தெரியும்?” என்றார் பெட்ரூஸ். “அவன் அறிந்திருக்கிறான்… மிகச்சரியாக அறிந்திருக்கிறான்.” பெட்ரூஸ் ஒன்றும் சொல்லவில்லை. ஒருமணிநேரத்தில் அவர்களை திபெத்தியப் படை சூழ்ந்துகொண்டது. அவர்கள் வந்துகொண்டிருப்பதை கீழிருந்து வேட்டு வழியாக மேலே அறிவித்தனர். வேட்டுக்கள் வழியாக பேசும் ஒரு மொழி அவர்களுக்கு இருந்தது. மேலிருந்த படை இறங்கிவந்தது. அவர்களுக்கு உணவும் நீரும் அளித்த திபெத்தியப் படை நாக்சு நகருக்கு அழைத்துச் சென்றது. நாக்சு நகருக்குள் நுழையும்போது சூசன்னா அந்த இளைஞனை மீண்டும் கண்டாள். அவன் நகரின் தெருவிலிருந்து
1 comment
Hey! I dont know tamil language!so I couldnot read this...hoping some new articles that can be read worldwide.. Yet you are doing great job man...keep it up...keep providing us some good articles..and best of luck to you.