read.cash Log in
@KingTamil

Moondru Sirukathaikal Tamil 2

மண்ணைப்போட்டு மூடிப்போட்டுட்டு ஓடீருவோம்லே” என்றான் லாசர். “மண்ணுண்ணு மாதிரி பேசப்பிடாது. ஏலே, இது விச வண்டுண்ணா நம்ம தங்கச்சிக்குட்டிகளை கடிச்சுப்போடும்லா?” லாசர் “ஆமா” என்றான். அவன் தங்கை ஏசுவடியாள் மிகச்சிறியவள். நாய்க்குட்டிபோன்ற அசைவுகளுடன் தவழ்ந்து அலைபவள். பேச்சு இன்னும் வரவில்லை. எல்லாரையுமே ன்னா ன்னா என்று அழைக்கிறாள். பசித்தால் அப்படியே அமர்ந்து ன்ன்ன்னா என்று வீரிட்டு அலறத் தொடங்கிவிடுவாள். அவன் அவளை குட்டி என்றுதான் அழைப்பான். அவன் எங்கே சென்றாலும் அவளும் மூன்றுகாலில் கிளம்பிவிடுவாள். அவன் விலகி ஓடினால் கைநீட்டி “ன்னா ன்னா” என்று கதறுவாள். அவள் குரல் செவிகளை துளைப்பது. அதிலிருந்து தப்ப அவன் மேலும் விரைந்து ஓடவேண்டும்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.