Karu Kurunaval Tamil Part 2
ஓர் இடத்தில் சூசன்னா கீழே விழுந்துவிட்டார். மேலே செல்வதற்கான உடலாற்றலை இழந்திருந்தாள். அதைவிட உள்ளம் நம்பிக்கை இழந்திருந்தது. பெட்ரூஸ் அவளை ஆறுதல்படுத்தி கூட்டிக்கொண்டு செல்ல முயன்றார். “இங்கே இப்படி விழுந்து கிடந்தால் நாம் செத்துவிடுவோம்” என்று பெட்ரூஸ் சொன்னார். “இங்கிருந்து நடந்தாலும் நாம் உயிர்பிழைக்கப் போவதில்லை. நம்மிடம் ஒருநாளுக்குரிய உணவே உள்ளது… கண்ணுக்கெட்டிய தூரம்வரை எவரும் இல்லை.” “அருகே எவரேனும் இருப்பார்கள், பார்போம்” என்றார் பெட்ரூஸ். “மனிதர்கள் இருந்தால் வானத்தில் ஒரு பறவையாவது தென்படும்.. இல்லை, இது சூனியமான பனிவெளி… இங்கே எவருமே இல்லை” என்று சூசன்னா சொன்னாள். “நாம் கடைசிவரை முயலவேண்டும் சூசி… அதை நாம் பலமுறை பேசியிருக்கிறோம்.”
No comments yet