Sirukathaikal Moondru Tamil Part 7
ஜான்சன் சென்று ஒரு சிறு உடைந்த கலத்தை எடுத்துவந்தான். அதற்குள் மணலை அள்ளிப்போட்டு உள்ளே அந்த வண்டை போட்டான். “மண்ணபோட்டு மூடப்பிடாது. சிலப்பம் அதுக்கு மூச்சுமுட்டும்…நல்ல பச்சை இலைய போடுவோம்” என்றான். அதன்மேல் இலையும் சருகும் போட்டு மூடினான். “ஏலே இது இலைய சாப்பிடுமா?” என்று லாசர் கேட்டான். ஜான்சன் சிந்தனையில் ஆழ்ந்தபின் “எறும்பையும் தின்னும்” என்றான். அருகிலிருந்த மாமரத்திலிருந்து இலையுடன் சிவப்பெறும்பு கூடு ஒன்றை எடுத்துவந்து கசக்கி உள்ளே போட்டான். “கொண்டு போயி உனக்க வீட்டுலே அக்கானிப்புரையிலே வையி… சத்தம் காட்டாம செய்யணும் கேட்டியா?” லாசருக்கு நெஞ்சு படபடத்தது. அந்த கலத்தை கையில் எடுத்துக்கொண்டபோது உடல் தளர்ந்தது.
1 comment
திருச்செந்தூர், தூத்துக்குடி. கடல் உள்ள ஊர்களே அழகான பெயர்கள் கொண்டவை. அவன் தலைகுனிந்து