read.cash Log in
@KingTamil

Moondru Dinosar kalangal Tamil 5

அவர்கள் இருவரும் அதை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தனர்.ஜான்சன் நீண்ட பெருமூச்சுவிட்டு ‘விச வண்டாக்கும்” என்றான். லாசரும் “விச வண்டாக்கும்” என்று சொல்லிக்கொண்டான். “என்னலே செய்யுதது?” என்று ஜான்சன் கேட்டான். “மண்ணைப்போட்டு மூடிப்போட்டுட்டு ஓடீருவோம்லே” என்றான் லாசர். “மண்ணுண்ணு மாதிரி பேசப்பிடாது. ஏலே, இது விச வண்டுண்ணா நம்ம தங்கச்சிக்குட்டிகளை கடிச்சுப்போடும்லா?” லாசர் “ஆமா” என்றான். அவன் தங்கை ஏசுவடியாள் மிகச்சிறியவள். நாய்க்குட்டிபோன்ற அசைவுகளுடன் தவழ்ந்து அலைபவள். பேச்சு இன்னும் வரவில்லை. எல்லாரையுமே ன்னா ன்னா என்று அழைக்கிறாள். பசித்தால் அப்படியே அமர்ந்து ன்ன்ன்னா என்று வீரிட்டு அலறத் தொடங்கிவிடுவாள்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.