read.cash Log in
@KingTamil

Karu Kurunaval Tamil Part 17

சட்டென்று பக்கவாட்டில் மலைச்சரிவில் பாறைகள் உருண்டு வரத்தொடங்கின. எருமைகள் குளம்போசையுடன் மலையிறங்கி வருவதாகத் தோன்றியது. அவர்கள் கூச்சலிட்டுச் சிதறினர். அலறியபடி முட்டிமோதினர். அவர்கள் மேல் மலைப்பாறைகள் பொழிந்தன. வணிகர்களில் பலர் நசுங்கி இறந்தனர். பனிப்பரப்பெங்கும் ரத்தம் தெறித்தது. ரத்தமணம் சூசன்ன்னாவை அலறச் செய்தது. மேலிருந்து கூச்சலிட்டபடி ஈட்டிகளும் வாள்களுமாக கொள்ளையர் இறங்கி வந்தனர். அவர்கள் வந்த வேகம் நம்பமுடியாததாக இருந்தது. அவர்களின் கால்கள் பட்டு உருண்ட பாறைகள் பாதையில் மழையாக விழுந்தன. அவற்றுடன் அவர்களும் குதித்தனர். பெட்ரூஸ் “சூசி, வேறுவழியில்லை. நம் குதிரைகளுடன் நாம் தப்புவோம்…” என்று கூவினார். அவர்களில் ஒருவனைச் சுட்டார். அவன் உருண்டு விழ அவன்மேல் பாறைகள் உருண்டன.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.