read.cash Log in
@KingTamil

Sirukathaikal Moondru Tamil Part 6

இருலே, நான் ஒரு சட்டி கொண்டாறேன். நீ அதில இத வச்சு உனக்க வீட்டுக்கு கொண்டுபோ…அங்க வச்சு நல்லா தீனிகுடு… இது வளந்து குட்டிபோடுதான்னு பாப்பம்” என்றான் ஜான்சன். “எனக்க வீட்டிலே அப்பன் அடிப்பாவ” என்று லாசர் சொன்னான். “நீ எதுக்கு அப்பனிட்ட சொல்லுதே? ஆருகிட்டையும் சொல்லாதே…சொன்னா அம்புடுதான்” என்றான் ஜான்சன். லாசர் “சொல்லமாட்டேன்” என்றான். பிறகு “ஏலே பயமாட்டு இருக்குலே…நீ உனக்க வீட்டிலே கொண்டுட்டுப்போயி வையி” என்றான். ஜான்சன் சீறிவிட்டான். “ஆருலே இவன்? ஏலே எனக்க வீட்டிலே எப்டி வைக்கமுடியும்? என்ன சொல்லுதே?”. லாசர் “ஆமா, வைக்க முடியாது” என்றான். “எனக்க வீட்டுக்கு கொண்டுபோறதா? கிறுக்கு மாதிரில்லா பேசுதே” என்றான் ஜான்சன்

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.