read.cash Log in
@KingTamil

Karu Kurunaval Tamil Part 20

உதவி உதவி!” என்று அவள் கூவினாள். “உதவி! என் கணவர் மறுபக்கம் சென்றிருக்கிறார்…” அவன் அவளை அணுகி அவள் கண்களுக்குள் கூர்ந்து நோக்கி “செல், அவர் இறந்துவிட்டார்” என்றான். “என்ன சொல்கிறாய்?” “சென்றுவிடு… அவர் இறந்துவிட்டார். பனிப்புயல் அணுகிக்கொண்டிருக்கிறது.” “நான் எப்படிச் செல்வது?” “என்னுடன் வா.” அவள் அவனை கூர்ந்து பார்த்தாள். “நீ யார்? ஏன் இங்கே இருக்கிறாய்?” அவன் ஒன்றும் சொல்லாமல் நடந்தான். அவள் குதிரையில் ஏறி அவனை தொடர்ந்து சென்றாள். “சொல், யார் நீ? ஏன் இங்கே இருக்கிறாய்?” அவன் ஒன்றும் சொல்லவில்லை அவள் குரலை கேட்டதாகவே தெரியவில்லை. “நீ என் குடும்பத்தின் முகம் கொண்டிருக்கிறாய்.” அவன் திரும்பியே பார்க்கவில்லை. அவன் பேசப்போவதில்லை என்று தெரிந்தது

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.