Karu Kurunaval Tamil Part 19
வேண்டாம் நீ இங்கே நில், நான் இந்த ஆற்றை கடந்து அப்பால் சென்று அங்கே என்ன என்று பார்த்து வருகிறேன்…” என்றார் பெட்ரூஸ் “இங்கே நின்றிரு…” அவர் பாறைகள் வழியாகத் தாவி அப்பால் சென்றார். அவள் அவர் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். நெடுநேரமாகியது. இருட்டத் தொடங்கியது. அவர் அங்கிருந்து வரப்போவதில்லை என்று தோன்றியது. ஆற்றைக் கடந்து சென்று என்ன நடந்தது என்று பார்க்கவேண்டும் என்று அவள் முடிவெடுத்தபோது அவளுக்குப் பின்னால் காலடியோசை கேட்டது. அவள் திரும்பிப் பார்த்தாள். அந்த இளைஞன். அவன் நாக்சேயில் இருந்து அத்தனை தொலைவு வந்திருக்கிறானா?
1 comment
Hey! I dont know tamil language!so I couldnot read this...hoping some new articles that can be read worldwide.. Yet you are doing great job man...keep it up...keep providing us some good articles..and best of luck to you.