read.cash Log in
@KingTamil

Karu Kurunaval Tamil Part 4

சூசி , நீ சொல்வதை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் எனக்கு நானே கூட ஒரு பொருட்டு அல்ல… அதனால் நீ சொல்வதெல்லாம் சமன்படுத்தப்பட்டு விடுகிறது” என்றார் பெட்ரூஸ். அவரைப் பார்த்து சூசன்னா புன்னகைத்தாள். அப்போது போல அவருக்கு மிக அருகே, மிகமிக இணக்கமாக அவள் தன்னை உணர்ந்ததே இல்லை. அவர் கையை பற்றியபடி “நான் உன்னை காதலிக்கிறேன் பேட்” என்று அவள் சொன்னாள். பெட்ரூஸ் புன்னகைத்தார். ‘ஏனென்றால் நீ சாத்தான்” பெட்ரூஸ் கண்களில் நீர் படர சிரித்தார். எனக்கு சற்று நீர் வேண்டும்… பிராந்தி இருக்குமென்றால் அது” என்றாள் பெட்ரூஸ் திரும்பி பார்த்தபோது அவருடைய குதிரை மெல்ல நடந்து மிக விலகிச் சென்றுவிட்டிருந்ததைக் கண்டார். அதன்மேல் பொதிகள் இருந்தன

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.