read.cash Log in
@KingTamil

Karu Kurunaval Tamil Part 13

ஆட்சியாளர் மிகத்தெளிவாகவே சொல்லிவிட்டார். அவர்கள் எந்நிலையிலும் எதற்காகவும் தடைசெய்யப்பட்ட நகருக்குள் நுழைய முடியாது. அந்தப் பாதையில் செல்வதற்கே அனுமதி இல்லை. நாக்சுவிலிருந்து அப்படியே திரும்பிவிடவேண்டியதுதான். அவர்கள் ஒருவாரகாலம் அங்கே ஓய்வெடுத்துக் கொள்ளலாம். உரிய உணவும் பிற பயணப்பொருட்களும் வழங்கப்படும். நாக்சுவிலிருந்து ஒரு வணிகர்குழு கீழே காங்க்டிங் என்னும் ஊருக்குச் சென்று கொண்டிருந்தது. அக்குழுவுடன் அவர்களிருவரையும் அனுப்பிவைக்க அவர் முடிவெடுத்தார். அவர்களுக்கு உதவியாக நாக்சுவிலிருந்து இரண்டு திபெத்திய வழிகாட்டி வீரர்களையும் அனுப்பி வைத்தார். செல்லும் வழியில் அவர்களுக்கு உதவட்டும் என்று திபெத்திய வெள்ளிக் காசுகளையும் அளித்தார்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.