read.cash Log in
@KingTamil

Karu Kurunaval Tamil Part 16

அதன்பின்னரே அவள் மலையின் சரிவான விளிம்பில் நின்றிருந்த கரிய உடை அணிந்த மனிதனைப் பார்த்தாள். அவன் கையில் நீண்ட ஈட்டியை வைத்திருந்தான். யாக்கின் தோலால் ஆன மயிராடையை அணிந்திருந்தான். அவன் முகம் தெரியவில்லை. ஒரு யாக் எழுந்து நின்றதுபோல தோன்றினான். “கொள்ளையர்! கொள்ளையர்!” என்று காவலர்கள் கூவினர். வாள்களையும் ஈட்டிகளையும் உருவிக்கொண்டனர். அவர்களிடம் இருந்தது ஒரே துப்பாக்கி. அதில் அவர்கள் குண்டு நிறைத்தனர். பெட்ரூஸ் தன் துப்பாக்கியில் குண்டு நிறைத்தார். அந்த முதல் மனிதன் கையை தூக்கினான். அவனருகே மேலும் கொள்ளையர் தோன்றினார்கள். பதினைந்து பேருக்குமேல் இருக்கும். அவர்கள் பெருகி நிறைந்து கொண்டிருப்பதாக தோன்றியது. அவர்களை நோக்கி மிகமெல்ல வணிகக்குழு முன்னேறியது.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.