read.cash Log in
@G4ceTech

Fartha anivathin nokkam

பர்தா ஏன் அணிகிறோம்? எங்களுடைய அழகும் வனப்பும் கணவருக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறோம். இது ஒரு வித சுயநலம் போலத்தான் தெரியும். ஆயினும், எங்கள் வளர்ப்பு முறை அப்படி! ஆக, வெளி ஆண்கள் யாரும் எங்கள் உடலின் தோற்றத்தைப் பார்ப்பது எங்களுக்கு விருப்பமில்லை! அதற்காகத்தான் பர்தா அணிகிறோம். பர்தாவால் என்ன நன்மைகள்? மதரீதியாக உள்ள விஷயங்கள் தனி! என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட நன்மைகள் என்னவென்றால், நைட்டில் போன்ற எந்த உடை அணிந்திருந்தாலும், தலை வாரி இருந்தாலும் இருக்காவிட்டாலும், உடனே நினைத்தவுடன் வெளியே கிளம்ப முடிகிறது. பொதுவாக பெண்கள் வெளியே கிளம்ப அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், கணவர் கோபித்து சண்டைகள் வருகின்றன. பர்தா காரணத்தால், எங்களிடையே அவ்வித சண்டைகள் வந்ததில்லை.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.