Loan vangi veedu katta poringala Tamil 4
இதுபோக சில இடங்களில் பாதாள சாக்கடை இல்லாமல் இருக்கும். அங்கே STP அதாவது Sewage treatment plant அமைத்து கழிவுநீரை சுத்திகரிக்க இயந்திரங்கள் அமைத்து அதனை பராமரிக்க வேண்டும். இதற்கு STP Charges என்று தனியாக கட்டணத்தை ப்ளாட் வாங்குவோர்களிடம் வசூலிக்கின்றனர். மும்முனை மின் இணைப்பு (3Phase) முன்பெல்லாம் 10 ஆயிரம் கொடுத்தால் வழங்கப்பட்டு வந்தது. அது இப்போது 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை போய்விட்டது. இதனையும் ப்ளாட் வாங்குபவர்கள் தான் செலுத்த வேண்டும். சில ப்ளாட்டுகளுக்கு டிரான்பார்மர் பொருத்தினால் தான் மின்வாரியம் இணைப்பே தருகின்றது. இந்த டிரான்ஸ்பார்மர்களின் விலையும் வாங்குவோர் தலையில் பில்டர்களால் சுமத்தப்படுகின்றது.
No comments yet