read.cash Log in
@G4ceTech

Farthavin payangal Last part Tamil

நேரிய வழியில் செல்வதற்கு இது ஏதுவாக இருக்கிறது. பர்தா அணிந்தாலும், நாங்கள் விரும்பியதைப் படிக்கிறோம். விரும்பிய துறையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுகிறோம். அதற்கு நானே உதாரணம். ஏன் இந்த பதிவு? ஆரம்பத்திலேயே நான் சொல்லிவிட்டேன். மற்றபடி நான் அனைத்து மத பழக்கவழக்கங்களையும் மதிப்பவள். சைவ சித்தந்தக் கொள்கையின் பட்டையையும், திருமால் பக்தர்களின் நாமத்தையும், பார்ப்பனீயர்களின் பூணூலையும், பாதிரிகளின் அங்கியையும், கன்னியாஸ்த்திரிகளின் ரோஸரியையும், சீக்கியர்களின் டர்பனையும் புரிந்து கொண்டு அதற்கு மரியாதை தருபவள் நான். அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அதே போல எம்மையும் எம்பர்தாவையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த இடுகை!

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.