read.cash Log in
@G4ceTech

Manaivi amaivathellam Iraivan Tamil II

நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..! பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம். மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா நானும் அவளிடம் கேட்கிறேன் உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு அதெல்லாம் ஒன்னும் வேணாம் இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன் பிடிக்குமென சிலதை சொல்ல

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.