read.cash Log in
@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 3

சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும் சாதனம் ஓர் ஏழைப் பெண் தன்னுடைய இரு பெண் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு என்னிடம் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்க ளைக் கொடுத்தேன். உடனே அவர் தம் குழந்தைகளில் ஆளுக்கொரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைச் சாப்பிடுவ தற்காக வாயருகில் கொண்டு சென்றார். அந்த ஒரு பேரீச்சம் பழத்தையும் அக்குழந்தைகள் கேட்டனர். உடனே அப்பெண் தாம் சாப்பிட நாடியிருந்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரண்டாகப் பிட்டு அவ்விரு குழந்தைகளிடையே பங்கிட்டுக் கொடுத்துவிட்டார். அவரு டைய நிலை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஆகவே, அவர் செய்ததை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரு டைய இச்செயலின் காரணத்தால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைக் கடமையாக்கிவிட்டான்'. அல்லது "அவரது இச்செயலின் காரணத்தால் அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்துவிட்டான்' என்று சொன்னார்கள்

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.