read.cash Log in
@G4ceTech

Iraivedam mugaivan palakkam Tamil 4

அல்லாஹ் குழந்தையைக் கொடுத்து விட்டால் ஸகரிய்யா நபி பெயர் சூட்டிக் கொள்ள மாட்டார்களா? அனைத்தையும் அறிந்த இறைவனாக நான் இருக்கிறேன் என்று நிரூபிக்கவே அல்லாஹ் இப்படிச் செய்திருக்க வேண்டும். எவர் வேண்டுமானாலும் எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டவரை இதற்கு முன் நீங்கள் காண முடியாது என்று அறைகூவல் விடுவது போல் இப்படி இறைவன் பேசியுள்ளான். முழு உலகிலும் எந்தக் காலத்திலும் இது இருந்ததில்லை; அது இருந்ததில்லை என்று சொல்வது மிகவும் கடினமான விஷயமாகும். ஏனெனில் நமக்குத் தெரியாமல் எங்காவது அது இருந்து தொலைத்து விட்டால் நம்முடைய மானம் கப்பலேறி விடும். கடவுளால் மட்டும் தான் இதுபோல் அடித்துச் சொல்லி இருக்க முடியும். இவ்வசனத்தைப் பொய்யாக்க யஹ்யா என்ற பெயரில் யாராவது இருந்தால் அதை வைத்தே இஸ்லாத்தைப் பொய்யாக்கி விடலாம் என்று கங்கணம் கட்டி கிறித்தவ சபைகள் தேடிப்பார்த்தும் அவர்களால் யஹ்யாவைக் கண்டுபிடிக்கவில்லை.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.