Jothidam neumaralaji alasal Tamil
அவனுக்கு ஏதோ புரிய துவங்கியது.. தனது அனுபவத்தை மனைவியிடம் கூறினான் தனுஷ். அவனை மையமாக பார்த்த அவனது மனைவி “அஞ்சு” அவனை பார்த்து...”எனக்கு உண்மையா இருக்கும் பொல இருக்குங்க நீங்க கூட நாலு பெண்ணை பார்த்த பிறகு தான் என்னை பெண் பார்த்து கல்யாணம் பண்ணிட்டீங்க. நியூமராலஜி பார்க்க கூட 5000 பீஸ் கொடுத்திருக்கீங்க. உங்களுக்கும் ஐந்தாம் எண்ணுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குங்க...:” என்றாள். தனது நண்பன் பஞ்சாபகேசனுக்கு தொலைபேசியில் தனது ஐந்து எண்ணின் மகத்துவத்தை கூறினான் தனுஷ். பஞ்சாபகேசன் உற்சாகமடைந்தான். ஐந்தாம் எண்ணை அதிர்ஷ்டமாக்கும் யோசனைகள் விவாதிக்கபட்டது.. இருவரும் ஐந்தாம் எண்ணின் அதிர்ஷ்டத்தை சோதிக்க குதிரை பந்தையத்திற்கு போகலாம் என முடிவாயிற்று.
2 comments
Dont understand the language! But it would be something great!
நம்ம குழந்தையை நம்மையே பெயர் சொல்லி அழைக்க விட மாட்டோம்