read.cash Log in
@Entertainment-Creator

Jothidam neumaralaji alasal Tamil 5

சட்டியில் இருந்தால் - அகப்பையில் வரும் - என்பது பழமொழி. இது காலத்தால் மருவி இந்த நிலையில் உள்ளது. இதன் உண்மையான கருத்து " ஷஷ்டியில் இருந்தால் -அகப்பை வளரும்". அதாவது ஷஷ்டியில் விரதம் இருந்தால் -அகப்பை (கருப்பை)வளரும் என்பதாகும். இந்த பழமொழியை கொண்டே இதன் சிறப்பை அறியலாம். மேலும் திதிகள் என்பது 15 நாளுக்கு ஒருமுறை வரும். மாதத்தில் 2 முறை விரதம் இருப்பது நமது உடல் நலத்திற்கு மட்டும் அல்ல மனநலத்தையும் வளர்க்கும். சந்திராம்ஸ விரதம் என சிலர் வட இந்தியாவில் கடைபிடிப்பதுண்டு. சந்திரன் 15 நாள் வளர்பிறையாகவும் பின்பு 15 நாள் தேய்பிறையாகவும் இருப்பதை வைத்து விரதம் அனுஷ்டிக்கிறார்கள்

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.