read.cash Log in
@ChemRaj

Nalayira thivya pirabantham odi pogalama 13 பாராளக் கன்னனிகற்பார்த்தனைமுன் கொன்றணங்கின்காரார் குழல்களைந்துகாலிற் றளைபூட்டிநேராகக் கைப்பிடித்துநின்னையும்யான் கட்டுவனேல்வாராமற் காக்கலா மாபாரதமென்றான்

கொஞ்சம் சீர் பிரிக்கலாம்: பார் ஆளாக் கன்னன் இகல் பார்த்தனை முன் கொன்று அணங்கின் காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி நேராகக் கைப் பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல்வாராமற் காக்கலாம் மாபாரதம் என்றான் பொருள்: பார் ஆளக் கன்னன் = கர்ணன் இந்த உலகை ஆள (இரண்டு சுழி "ன்" போட்டால் கர்ணன்) இகல் பார்த்தனை = பகைமை கொண்ட அர்ஜுனனை முன் கொன்று = அதற்க்கு முன்னால் கொன்று அணங்கின் = பாஞ்சாலியின் காரார் குழல் களைந்து = கருமையான முடியை களைந்து மொட்டை அடித்து காலில் தளை பூட்டி = காலில் விலங்கு பூட்டி நேராகக் கைப் பிடித்து = உன் கைகளையும் பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல் = உன்னையும் நான் கட்டினால் வாராமற் காக்கலாம் மாபாரதம் என்றான் = இந்த மா பாரதப் போர் வராமல் காக்கலாம் என்றான்

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.