read.cash Log in
@ChemRaj

Vikramathithan Blood Tamil Novel

**விக்ரமாதித்யன் ரத்தத்தில்** ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான் எனினும் ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில் தங்க நேர்கிறது எனக்கு சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான் எனினும் சோரம் போகிறவர்களிடம் சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு திருடிப்பிழைத்ததில்லை நான் எனினும் திருடிப் பிழைப்பவர்களிடம் யாசகம்வாங்கி வாழநேர்கிறது எனக்கு கூட்டிக்கொடுத்ததில்லை நான் எனினும் கூட்டிக்கொடுப்பவர்களின் கூடத் திரிய நேர்கிறது எனக்கு காட்டிக்கொடுத்ததில்லை நான் எனினும் காட்டிக்கொடுப்பவர்களின் கருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு பாபத்தில் வந்த பலனைக் கையாடினால் பாபம் படியாதோ சாபம் கவியாதோ முதலில் என்னை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்னை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் இல்லெங்கில் எச்சில் பிழைப்புதான் இரண்டும்கெட்டான் வாழ்க்கைதான்

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.