read.cash Log in
@ChemRaj

Siththarpadalkal Pattinatharin Tamil

உற்றார் சதம் அல்ல - அவனவன் அவன் பொண்டாட்டி புள்ளை, வேலை வெட்டினு அலைஞ்சுகிட்டு இருக்கான். நம்மள பார்க்க அவனுக்கு எங்க நேரம் இருக்கு ? அது எல்லாம் நிரந்தரம் கிடையாது உற்று பெற்ற பேரும் சதம் அல்ல - பேரும் புகழும் நிரந்தரம் இல்லை. பேரும் புகழும் ஒரே நாளில் போய் விடலாம். "அவனா இப்படி செஞ்சான் ? நல்லவன்னு நினைச்சேனே" என்று சொல்லும்படி ஆகிவிடலாம். பெண்டீர் சதம் அல்ல - கொட்டி முழக்கி அழுதிடுவார் மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ கச்சியேகம்பனே என்பார் பட்டினத்தார்.. பிள்ளைகளும் சதம் அல்ல - படிச்சு முடிஞ்சு, கல்யாணம் ஆனவுடன் பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையை பார்க்க போய் விடுவார்கள். சீரும் சதம் அல்ல - சொத்து பத்து எல்லாம் நிரந்தரம் அல்ல.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.