Kanmaniye pesu kanmayanga kooru Tamil Kavithaikal
உன் நினைவுகளால் அன்று உன் குரலை கேட்டதும் கண்ணீர் வந்தது ,சந்தோசத்தில் .! இன்றும் உன் குரலை கேட்டதும் கண்ணீர் வருகிறது ,உன் நினைவுகளால். கலையாத கனவு வேண்டும்.. காணும் இடம் எல்லாம் நீ தெரியவேண்டும்.... விடியாத இரவு வேண்டும்... முடியாத சரசம் வேண்டும்... பிரிவில்லாமல் உன்னோடு வாழ வேண்டும்.... உன் மடியில் நான் சாக வேண்டும்... கள்ளமில்லா. உன் அன்பு வேண்டும்.. கள்ளத்தனமாய் என்னை கட்டி... சகிக்க முடியவில்லையடி இந்த தனிமையை.... சுகிக்க நினைக்கிறேன் உன்னை. உனக்காக ஒவ்வொன்றையும் விட்டுக்கொடுக்கத் தெரிந்த எனக்கு உன்னை விட்டுக்கொடுக்கத் தெரியவில்லை. அடுத்த பிறவி இருந்தால் அவள் நெற்றியில் விளையாடும் ஒற்ரை முடியாக பிறக்க வேண்டும். என்ன தவம் செய்ததோ தெரியவில்லை, நொடிக்கு நொடி அவள் விரல்கள் தீண்டிக்கொண்டே இருக்க... உன் முகம் பார்த்து என் காதலை உன்னிடம் சொன்ன போது... நீயும் சொல்லிருக்கலாம்... உன்னை பிடிகவில்லைஎன்று... மெளனமாக சம்மதம் சொல்லிவிட்டு... இன்று எங்கோ பார்த்தபடி... என்னை பிடிக்கவில்லை என்கிறாயடி... பெண்ணே... நான் கட்டிய என் காதல் கோட்டை. நீ இல்லாமல் இருந்திருந்தால்கூட உயிர் வாழ்வேன். நீ ஏற்காமல் போனால் செத்தேபோய் விடுவேன்.
1 comment
நமக்கான காதல்அடுத்த பிறவி இருந்தால் அவள் நெற்றியில் விளையாடும்