Nalayira thivya pirabantham odi pogalama Tamil 9
நாம் எல்லாம் கடல் பார்த்து இருக்கிறோம். அதில் உள்ள தண்ணீர் எப்படி இருக்கும் ? ஒரே உப்பாய் இருக்கும். வாயில் வைக்க முடியுமா ? ஆனால் அந்த கடலே குடிக்க இனிமையான நீரால் நிறைந்து இருந்தால் எப்படி இருக்கும் ? இறைவனின் அருள் அப்படி அளவற்றதாய் கடல் நிறைந்த நல்ல தண்ணீரைப் போல இருக்குமாம். இன்னொரு அர்த்தம். நமக்குத் தான் கடல் நீர் உப்பாக இருக்கிறது. அதில் உள்ள மீனுக்கு அது ஒண்ணும் கஷ்டமாய் இல்லை. அந்த நீரை குடித்து, சுவாசித்து உயிர் வாழ்கிறது. அது போல் இறைவனின் கருணையில் மூழ்கி திளைக்கும் பக்தர்களுக்கு அந்த நீர் வாழ்வாதாரம். அந்த கடலில் மூழ்காமல் கரையில் நின்று கொண்டு தர்க்கம் பண்ணி கொண்டு இருப்பவர்களுக்கு அது உப்பு நீர். சொலறத சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்.
No comments yet