read.cash Log in
@ChemRaj

Nalayira thivya pirabantham odi pogalama 8

தெள்ளேணங் கொட்டாமோ.பதம் பிரித்த பின் உருகி பெருகி உள்ளம் குளிர முகந்து கொண்டு பருகர்க் இனிய பரங் கருணை தடங் கடலை மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் திருவை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ உருகி = உள்ளம் உருகி பெருகி = அன்பினாலும், பக்தியாலும் உடல் பூரித்து உள்ளம் குளிர = உள்ளம் குளிர முகந்து கொண்டு = தண்ணீரை முகந்து பருகர்க் இனிய = குடிப்பதற்கு இனிமையான பரங் கருணை = மேலான கருணை உடைய தடங் கடலை = அலைகளை கொண்ட கடலை மருவி = சேர்ந்து திகழ் தென்னன் = பெருமை உடைய, சிறப்பு உடைய தென் நாட்டை சேர்ந்தவனான சிவனின் வார் கழலே = நீண்ட திருவடியை நினைந்து அடியோம் = நினைத்து அடியவர்களாகிய நாம் திருவை பரவி = அவனைப் புகழ்ந்து (திரு = உயர்வு, சிறப்பு, செல்வம் நாம் தெள்ளேணம் கொட்டாமோ = நாம் தெள்ளேணம் கொட்டாமோ

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.